ஆவாரம் பூ பொடி

ஆவாரம் பூ பொடி

Aavarampo powderஎன்னென்ன தேவை?

காய்ந்த மிளகாய் 15

உலர்ந்த ஆவாரம் பூ,

கடலைப் பருப்பு தலா அரை கப்

உளுந்து அரை கப்

பூண்டு 6 பல்

பெருங்காயம் சிறிதளவு

எண்ணெய், உப்பு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் எண்ணெயில் பொரித்துக்கொள்ளுங்கள். ஆவாரம்பூ, கடலைப் பருப்பு, உளுந்து ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டு வலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரகக் கோளாறு இப்படிப் பல வகையான பிரச்சினைகளுக்கு ஆவாரம் பூ அருமையான மருந்து.

Leave a Reply