பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் அடையாளம் கண்டுபிடிப்பு. விரைவில் கைது?

பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் அடையாளம் கண்டுபிடிப்பு. விரைவில் கைது?
paris
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரீஸ் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதல் நடத்தியதில் 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த தீவிரவாதியை பிடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அப்டெல்ஹமித் அபவுட் என்ற 28வயது தீவிரவாதிதான் இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவன் என்றும், சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று ஏற்கனவே பெல்ஜியம் நாட்டு போலீசாரால் தேடப்படும் தீவிரவாதியாக இவன் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மொராக்கோ நாட்டின் வம்சாவளியைச் சேர்ந்த இவன், பெல்ஜியம் பிரஜையை சேர்ந்தவன் என்றும், அங்கிருந்தபடியே சிரியாவுக்கு சென்று அங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இவன் இணைந்ததாகவும், தீவிர பயிற்சிக்கு பின்னர் பாரீஸ் தாக்குதலுக்கு திட்டமிட்டதாகவும்  கூறப்படுகிறது.

இவனது நெருங்கிய நண்பன் பாரிஸ் தாக்குதலின்போது மனித வெடிகுண்டாக செயல்பட்டதாகவும், இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றும் தேடப்பட்டு வரும் பலருடனும் நெருங்கிய தொடர்பு இந்த தீவிரவாதி வைத்திருந்ததாகவும் பிரான்ஸ் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சிரியாவில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் இவனை விரைவில் கைது செய்து பாரிஸ் நகருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ய பிரான்ஸ் அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

English Summary: Abdel-Hamid Abu Oud named as alleged mastermind of Paris terror attacks

Leave a Reply