அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் கடந்த 1865ஆம் ஆண்டு, ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுடப்பட்ட சிறிது நேரத்தில்,அவரை போஸ்ட் மார்ட்டம் செய்த டாக்டர் ஜோசப் பர்னஸ் என்பவர் ஆபிரகாம் லிங்கனின் தலைமுடியை நீக்கினார்.
இந்த தலைமுடிகள் ஆபிரகாம் லிங்கனின் மற்ற பொருட்களோடு தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 150 ஆண்டுகளாக பாதுகாத்து வருகிறது. தற்போதுமறைந்த லிங்கனின் ஏலம்விட அந்த நிறுவனம் முடிவு செய்து அதற்கான நாளையும் குறித்தது. இந்த ஏலம் சமீபத்தில் நடைபெற்றதாகவும், லிங்கனின் தலைமுடி இந்திய மதிப்பில் சுமார் 15 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதேபோல், ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் தலைமுடியும் ஏலம் விடப்பட்டது. இவருடைய தலைமுடி எவ்வளவு தொகைக்கு ஏலம் போனது என்பதையும், யார் ஏலம் எடுத்தார்கள் என்ற தகவல்களையும் கூற ஏல நிறுவனம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆபிரகாமின் தலைமுடி மட்டுமின்றி அவர் பயன்படுத்திய மற்ற பொருட்களும் இதே நாளில் ஏலம் விடப்பட்டது. ஆபிரகாம் லிங்கனின் அனைத்து பொருட்களும் ரூ.5 கோடிக்கு ஏலம்போனதாக தகவல்கள் கூறுகின்றன.