விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்தது. விபத்துக்கு காரணம் என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்தது. விபத்துக்கு காரணம் என்ன?

flightபிரேசில் நாட்டு சாப்பகோயன்சி கால்பந்து அணி வீரர்கள் உட்பட 81 பேரை ஏற்றி கொண்டு சென்ற CP2933 என்ற விமானம் நேற்று விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 76 பேர் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேர்களின் உடல்கள் கிடைக்காததால் அவர்கள் உயிர் பிழைத்திருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டியை மீட்புத்துறையினர் கண்டுபிடித்து விமானத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கருப்புப் பெட்டியை ஆய்வு செய்தால் விமானம் எதனால் விபத்துக்குள்ளானது, விபத்து நடப்பதற்கு முன்னால் அதில் இருந்த பயணிகளுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி விபத்திற்கு முன் விமான பைலட்டுகள் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் இந்த கருப்புப்பெட்டியில் பதிவாகியிருக்கும். இந்த கருப்பு பெட்டி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply