புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று பதவியேற்றுள்ளார்.
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தவர் நசீம் ஜைதி. இவர் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20வது தலைமை தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில், இவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததையொட்டி 21வது தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி இன்று பதவியேற்றார். 64 வயதாகும் அச்சல், 1975ம் ஆண்டு ஐஏஎஸ் முடித்துள்ளார்.
மேலும், குஜராத் மாநில ஆணையராகவும், தலைமை செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். இன்று புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற அச்சல் குமார் ஜோதி, 2018ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி வரை பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவரது தலைமையில், குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.