ஜெயலலிதா வழக்கில் ஆச்சார்யா ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து புதிய மனு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எந்த நேரத்திலும் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் இருந்து ஆஜராகி வாதாடி வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஏற்கனவே தனது வாதங்களை முடித்து விட்டார்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் பி.ரத்தினம் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் ‘மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா எழுதியுள்ள சுயசரிதை நூல் ஒன்றில் சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து பல்வேறு விஷயங்களை எதிர்மறையாக குறிப்பிட்டு உள்ளதாகவும், எனவே அவர் முன் முடிவுகளுடன் ஒருதலைப்பட்சமாக நடந்து வருவதாகவும் இதன் காரணமாக அவர் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராக கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்க முடியாது என்றும், இதன் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இ