குதிகால், மூட்டுவலி போக்க…

download (2)

பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், சிறுவர்களுக்கும் இப்போது பல உடல் உபாதைகள் வந்து விடுகின்றன. அதில் குதிகால் மற்றும் மூட்டு வலியும் இணைந்துக் கொள்கிறது. குதிகால் மற்றும் மூட்டு வலி வர, முக்கிய காரணமாக இருப்பது அதிக உடல் எடையாகும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதாலும், குதிகாலில் வலி ஏற்படுகிறது. பெண்கள் அதிகம் உயரமுள்ள காலணிகளை அணிவதை தவிர்த்தால், குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை, உடலின் எடையை தாங்கும் எலும்புகள் மற்றும் சதைகள் உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழந்தால் நடக்கவும், நிற்க முடியாது. குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும். இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும், காலையில் குளிப்பதற்கு முன்னும், உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்வது நல்லது.

சுத்தமான ஆயுர்வேதிக் தைலத்தை காய வைத்து இளம் சூட்டுடன் இரவில் படுக்கும் முன் கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் வரை வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் மூழ்கும் அளவு 20 நிமிடம் வரை வைத்திருந்து, பின், துணியால் காலை துடைத்து விட்டுப் படுக்கச் செல்லாம்.

காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோல செய்யலாம். கடினமான காலணியை தவிர்த்து மிருதுவான காலணியை பயன்படுத்த வேண்டும். கால்களை தரையில் அதிகமாக அழுத்தி நடப்பதை தவிர்த்து மென்மையாக நடந்து செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். திராட்சை பழத்தில், அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதனால், வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடலாம்.

சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும். முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குணமாகும்.
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால், மூட்டு வலி குணமாகும். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலி வருவதை தடுக்கலாம்.

உணவில், பல்வேறு உடல் உபாதைகளை கட்டுக்குள் கொண்டு வர முடியும். சரியான உணவுகளை எடுத்துக் கொண்டால், எந்த நாளிலும் பிரச்னை என்பதே இருக்கப் போவதில்லை.

Leave a Reply