அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பை நிராகரித்தார் அச்சுதானந்தன்.

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனை ஆம் ஆத்மி கட்சியில் சேருமாறு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை இன்று அச்சுதானந்தன் நிராகரித்துள்ளார்.

நான் எனது பள்ளி பருவ காலத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைக்க ஆரம்பித்து விட்டேன். நான் எப்போதுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகத்தான் இருப்பேன். அதற்காகத்தான் உழைப்பேன், எனது கொள்கை தெரியாமல், என்னுடைய 75 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை புரியாமல் அரவிந்த் கெஜ்ரிவால் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு எந்த கட்சியையும் என்னால் மனதால் கூட நினைத்து பார்க்க முடியாது. என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் ஆம் ஆத்மி கட்சியில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1d8lTB7″ standard=”http://www.youtube.com/v/KHRKfheepZ4?fs=1″ vars=”ytid=KHRKfheepZ4&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep4163″ /]

Leave a Reply