தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று பெண் டாக்டர் ஒருவர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1wjgAY0″ standard=”http://www.youtube.com/v/l40q95CyibI?fs=1″ vars=”ytid=l40q95CyibI&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep8893″ /]
மேற்கு டெல்லியில் உள்ள ஹரி நகரில் வசித்து வந்த பெண் டாக்டர் ஒருவர் நேற்று மாலை தனது ஸ்கூட்டில் ரஜூரி கார்டன் என்ற பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மார்க்கெட் அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், பெண் டாக்டரை வழி மறித்தனர். இதனால் பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் வாகனத்தை நிறுத்தி, எதற்காக வழி மறிக்கின்றீர்கள் என்று கேட்பதற்குள் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்திருந்த ஒருவன் டாக்டர் மீது ஆசிட்டை வீசினான். பின்னர் கண் இமைக்கும் நேரத்திற்குள் இருவரும் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் காரணமாக டாக்டரின் பாதி முகம் வெந்து விட்டது. இதனால் வலியால் துடித்து, அலறினார். இருப்பினும் யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லையாம். இதுகுறித்து தகவல் அறிந்த டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பெண் டாக்டரை மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவ் கேமராக்கள் அனைத்திலும் பதிவாகியுள்ளது. இந்த காட்சியை வைத்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.