ஷாருக் கானை போல் பாலிவுட்டின், மற்றொரு முக்கிய நடிகரான ஹிருத்திக் ரோஷனும், “நான், ரஜினி ரசிகன்” என்று கூறியுள்ளார்.”இந்தியில் ரஜினி சார் நடித்த, “பகவான் தாதா” என்ற படத்தில், நான் 12 வயது சிறுவனாக நடித்திருந்தேன். அதிலிருந்தே, அவரது ரசிகனான நான், இன்று வரை, அவர் நடித்த படங்களை தவறாமல் பார்த்து ரசித்து வருகிறேன்.அது மட்டும் இல்லாமல் , ரஜினியை தான் முன் உதாரணமாக, எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்றும் கூறியுள்ளார். மேலும், “அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், அதை என் வாழ்நாள் சாதனையாக கருதுவேன்” என்று தெரிவித்துள்ளார்.