ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செம்மரக் கட்டைகள் கடத்தியதாக 20 தமிழர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரம் தமிழக ஆந்திர மாநிலங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய புள்ளிகளை பிடிப்பதில் ஆந்திர மாநில போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
என்கவுண்டரின் போது உயிரோடு பிடிக்கப்பட்ட செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது அவர்கள், ‘‘ஆந்திராவில் வெட்டப்படும் செம்மர கட்டைகள் சென்னை மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன’’ என்று திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து மேற்குவங்கத்தில் உள்ள குடோன்களில் அதிரடி ரெய்டு செய்து கோடிக்கணக்கான மதிப்புள்ள செம்மரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களில் தமிழக, ஆந்திர அமைச்சர்களும் உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவர்கள் விரைவில் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு முக்கிய நடிகரும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.