பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது 80 வயதாகும் சோ, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் உடனே அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து, அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சோவுக்கு கடந்த சில நாட்களாக சளி இருந்ததாகவும் அதன் காரணமாக அடிக்கடி லேசான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதுவரையில் அவருக்கு மூச்சுத் திணறல் குறையவில்லை என்றும் தொடர்ந்து அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.