கானாபாலாவின் ‘மெட்ரோ’ பாடலை வெளியிட்டார் கார்த்தி
கோலிவுட்டில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் பாபிசிம்ஹா. ‘ஜிகர்தண்டா’ படத்திற்கு பின்னர் இவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது அவர் கோ 2, இறைவி, பெங்களூர் நாட்கள், பாம்புச்சட்டை, மெட்ரோ, வல்லவனுக்கு வல்லவன், 123, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பாபிசிம்ஹா நடித்த ‘மெட்ரோ’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி இன்று வெளியிட்டுள்ளார். இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார். இந்த படத்திற்கு ஜோஹான் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை ஆனந்த் கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விதார்த் நடித்த ‘ஆள்’ என்ற படத்தை இயக்கியவர். வெளிநாடுகளுக்கு தங்கத்தை கடத்தும் அண்டர்வேர்ல்ட் கும்பல் ஒன்றின் கதைதான் ‘மெட்ரோ’ என்பது குறிப்பிடத்தக்கது.