திமுக-அதிமுகவுடன் கூட்டணியா? கார்த்திக் முக்கிய முடிவு.

திமுக-அதிமுகவுடன் கூட்டணியா? கார்த்திக் முக்கிய முடிவு.
karthik
நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். தேர்தலின்போது மட்டும்தான் இப்படியொரு கட்சி இருக்கின்றது என்பது மக்களுக்கு தெரியவரும். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் நிலை குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசினார்.

வரும் தேர்தலில் திமுக, மற்றும் அதிமுக கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகவும், விரைவில் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்போவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply