சினிமா என்பது ஒரு பவர்புல் மீடியா என்பது அனைவரும் அறிந்ததே. சினிமா வசனங்கள் சில சமயம் பெரிய மாற்றத்தையே ஏற்படுத்திவிடும். அதுவும் ஒரு மாஸ் நடிகர் வசனம் பேசினால் கேட்கவே வேண்டாம். பொறி பறக்கும். அப்படி ஒரு பொறிதான் தற்போது கத்தி படத்தின் வசனத்தால் ஏற்பட்டுள்ளது.
கத்தி படத்தின் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்ட போது அதற்கு திமுக தரப்பில் இருந்து சாதகமான அறிக்கைகள் வெளிவந்தன. கத்தி படத்தின் ரிலீஸுக்கு உதவத்தயார் என திமுகவின் ஜெ.அன்பழகன் ஓப்பனாகவே ஸ்டேட்மெண்ட் விட்டார். ஆனால் அந்த படத்தின் பெரும்பாலான வசனங்கள் திமுகவிற்கு எதிராக இருப்பது கண்டு தற்போது திமுக முருகதாஸ் மற்றும் விஜய் மீது அதிருப்தி கொண்டுள்ளது.
2ஜி ஊழல் குறித்து ஆவேசமான வசனம் வைத்த முருகதாஸ் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றது குறித்து எதுவுமே கூறவில்லை. மேலும் படத்தின் பிரச்சனைகளை தீர்க்க உதவிய அம்மாவுக்கு நன்றி என விஜய் ஓப்பனாகவே அறிக்கை விட்டார். இவை இரண்டுமே திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி படம் ரிலீஸுக்கு பின்னர் முருகதாஸ் அளித்த பேட்டியும் திமுகவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.