நடிகர் விவேக் மகன் பிரசன்னா திடீர் மரணம்.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் 15 வயது மகன் பிரசன்னா மூளைக்காய்ச்சலால் சற்று முன்னர் மரணம் அடைந்தார்.
15 வயதான பிரசன்னா, மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சையின் பலனின்றி சற்று முன்னர் அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் பிரசன்னாவின் உடல் அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் விவேக் மற்றும் அவரது குடும்பத்தார்களுக்கு கோலிவுட் திரையுலகினர் நேரிலும், தொலைபேசியிலும் ஆறுதல் கூறி வருகின்றனர்.