காமெடி நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் திடீர் கைது. காரணம் என்ன?

ygm sonபிரபல நகைச்சுவை நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் சகலையுமான ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் சென்னையில் அனுமதியின்றி ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆளில்லாத விமானம் பறக்கவிடுவதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே காவல்துறையினர்களிடம் அனுமதி வாங்கிய பின்னரே சென்னையில் ஆளில்லாத விமானம் பறக்க விடப்படவேண்டும். இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையின் முகத்துவாரத்தில் நேற்று காலை 6 மணியளவில் ஒரு நபர், ஆளில்லாத விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பறக்கவிட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் அங்கு ஆளில்லாத விமானத்தைப் பறக்கவிட்டவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷா என்பதும், விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றுக்காக ஆளில்லா விமானத்தை வாங்கிய அவர், போலீஸாரிடம் முன் அனுமதி பெறாமல் பறக்க விட்டதாகவும் தெரியவந்தது. உடனடியாக கைது செய்யப்பட்ட அவர் பின்னர்  ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் பட்டினப்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply