நடிகை அமலாபால் திடீர் கைது! காரணம் என்ன?

நடிகை அமலாபால் திடீர் கைது! காரணம் என்ன?

பிரபல தமிழ் நடிகை அமலாபால் நேற்று திடீரென கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஒருசில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார்.

நடிகை அமலாபால் சமீபத்தில் சொகுசுக்கார் ஒன்றை வாங்கினார். இந்த காரை தனது சொந்த மாநிலமான கேரளாவில் ரிஜிஸ்டர் செய்யாமல், வரி ஏய்ப்புக்காக பொய்யான முகவரியில் புதுச்சேரியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், அமலாபால் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அமலாபால் விசாரணைக்காக ஆஜரானார். விசாரணைக்கு பின்னர் அமலாபால் கைது செய்யப்பட்டதாகவும், ஆனால் ஏற்கனவே அவர் பெற்றிருந்த முன்ஜாமினை அடிப்படையாக கொண்டு அவர்கள் உடனே அவரை விடுதலை செய்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply