இது கலியுகம். இந்த யுகத்தில் மூடி மறைத்து முக்காடு இட்டு நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிப்பேன் என அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார் அறிமுக நடிகை பார்பி ஹண்டா.
பாலிவுட்டில் விரைவில் வெளிவரவுள்ள ஜித் என்ற படத்தில் அறிமுகமாகும் பார்பி ஹண்டா, பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் தங்கை முறை உறவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜித் படத்தில் கதையின் முக்கிய காட்சி ஒன்றுக்கு நிர்வாணமாக நடிக்க வேண்டும் என இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கேட்டுக்கொண்டபோது முதலில் பார்பி கொஞ்சம் தயங்கியுள்ளார். பின்னர் தனது சகோதரி ப்ரியங்கா சோப்ராவிடம் ஆலோசனை கேட்டபோது, கதைக்கு தேவையென்றால் தைரியமாக நடிக்கலாம், நிர்வாணம் என்பது ஒரு கலை. தவறு, பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது! உன் மனதுக்குப் பட்டதைச் செய்!’’என்று அறிவுரை கூறினாராம்.
சகோதரியின் ஆலோசனை கொடுத்த தைரியத்தில் ஜித் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். நவம்பர் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.