டி.ராஜேந்தரின் ‘காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சார்மி அதன்பின்னர் ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு போன்ற பல தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது விக்ரம்,சமந்தா நடித்து வரும் பத்து என்றதுக்குள்ள என்ற படத்தில் ஒரு குத்தாட்டம் ஆடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் சிசில் கோப்பையை வென்றதற்காக நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்துக்கு நடிகை சார்மி சென்று இருந்தார். அங்கு 18 வயது இளைஞர் ஒருவர் நடிகை சார்மியை அணுகி அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதற்கு சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்தார்.
ஆனால் அந்த சமயத்தில்அந்த வாலிபர் திடீரென சார்மி இடுப்பை பிடித்ததாகவும், இதனால் சார்மி அதிர்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகிறது. உடனே சார்மியின் பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து ஆவேசமாக அடித்து அங்கிருந்து விரட்டி விட்டனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து சார்மி கூறும்போது, அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து தவறாக நடக்க முயன்றார். நான் தள்ளி விட்டேன்.
அப்போது என் பாதுகாவலர்களும் அருகில் நின்றனர். அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள். அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருக்க விடமாட்டேன்’’ என்றார்.