மறைந்த இயக்குனர் பாபுவுக்கு சார்மி எழுதிய காதல் கடிதம்.

charmiநேற்று மரணமடைந்த தெலுங்கு படவுலகின் பிரபல இயக்குனர் பாபு அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வரும் இந்த நேரத்தில் நடிகை சார்மி, அவருக்கு காதல் கடிதம் எழுதிய அனுபவத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பாபு அவர்களின் இயக்கத்தில் ‘சுந்தரகாண்டா’ என்ற படத்தின் வெளிப்புற படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தபோது தனக்கு கடுமையான காய்ச்சல் வந்ததாகவும், அந்த சமயத்தில் தனக்கு மிகுந்த உதவியாக இயக்குனர் பாபு இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்தவுடன் அவருக்கு காதல் கடிதம் எழுதியதாகவும், ஆனால் அந்த கடிதத்தை அவரிடம் கொடுக்க தைரியமில்லாமல் சாமி படத்திற்கு முன்னர் வைத்துவிட்டதாகவும் சார்மி கூறியுள்ளார்.

தன்னை சாம்ஸ் என்று அன்போடு அழைக்கும் பாபுவின் மறைவு தனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தாக கூறியுள்ள சார்மி, அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply