பழம்பெரும் தமிழ் நடிகை மருத்துவமனையில் அனுமதி
கே.பாலசந்தர் இயக்கிய எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், வெள்ளிவிழா, பாமா விஜயம், புன்னகை, வெள்ளிவிழா, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜெயந்தி, கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் புகழ் பெற்றிருந்தார்.
எம்.ஜி.ஆருடன் படகோட்டி மற்றும் முகராசி, சிவாஜி கணேசனுடன் கர்ணன், இருவர் உள்ளம் மற்றும் ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் ஆகியோருடன் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை ஜெயந்திக்கு இன்று காலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஸ்துமா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கும் டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கவனித்து வருகின்றனர்.