கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் நடிகையின் சோக வரலாறு திரைப்படமாகிறது.

kangana_sm_650_032015071403பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகை மீனாகுமாரி. இவர் குழந்தை நட்சத்திரமாக கடந்த 1939 ஆம் ஆண்டு அறிமுகமாகி அதன்பின்னர் 1972ஆம் ஆண்டு வரை பாலிவுட்டில் சுமார் 90 படங்களில் நடித்துள்ளார். சினிமா வாழ்க்கையில் பல உச்சங்களை தொட்ட மீனாகுமாரியின் சொந்த வாழ்க்கையில் சோகமே நிறைந்திருந்தது.

தன்னை விட 15 வயது அதிகமுள்ள இயக்குனர் கமல் அம்ரோஹி என்பவரை காதலித்து திருமணம் செய்த மீனாகுமாரி, திருமண வாழ்க்கை திருப்தியாக அமையாத வெறுப்பில் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவருடைய உடல் நலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு 1972ஆம் ஆண்டு பரிதாபமாக மரணம் அடைந்தார்.

இந்த சோக நாயகியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று தற்போது பாலிவுட்டில் தயாராகவுள்ளது. இன்னும் பலரது நெஞ்சில் குடியிருந்து வரும் மீனாகுமாரியின் கேரக்டரில் நடிக்க, நடிகை கங்கனா ரனாவத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ‘குவீன்’ உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர். தமிழில் ஜெயம் ரவியுடன் ‘தாம்தூம்’ படத்தில் நடித்த கங்கனா, இந்த படத்தில் நடிப்பதற்காக அவரை பற்றி வெளியான சுமார் 15 புத்தகங்களை வாங்கி படித்து வருகிறார். எந்த கேரக்டரில் நடித்தாலும், அதில் ஒன்றிப்போய் நடிக்கும் வழக்கம் உடைய கங்கனா, மீனாகுமாரியின் வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களையும் படித்து தெரிந்து கொண்டு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply