‘கட்டம் போட்ட சட்டை’ படத்தில் பிசாசு நாயகி பிரயாகா

 ‘கட்டம் போட்ட சட்டை’ படத்தில் பிசாசு நாயகி பிரயாகா
prayaga
சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இளம் நடிகர் அஜய்கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படம் ‘கட்டம் போட்ட சட்டை’. இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் நடிகை பிரயாகா. இவர் மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் அவர்களிடம் உதவியாளராக இருந்த அக்சயகுமார் இயக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார். சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சரவணன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகேயுள்ள அழகர்மலை என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. தென்மாவட்ட கலாச்சாரத்தை இயல்பாக சொல்ல முயலும் முயற்சியே இந்த படம் என இயக்குனர் அக்சயகுமார் கூறியுள்ளார்.

Leave a Reply