அரசியலில் தோல்வி. அழகு நிலையம் தொடங்குகிறார் டெபாசிட் இழந்த கவர்ச்சி நடிகை.

Racky Sawanthஅரசியலில் தோல்வி அடைந்ததால் அழகு நிலையம் செல்ல இருப்பதாகவும், அதனால் கட்சியின் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் ராஷ்டிரிய ஆம் என்ற புதிய கட்சியை தொடங்கி துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தர்.

வட மேற்கு மும்பை தொகுதியில், மிளகாய் சின்னத்தில் போட்டியிட்ட ராக்கி சாவந்த் 2 ஆயிரம் ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

இதனால் மனம் வெறுத்த அவர் ராஷ்டிரிய ஆம் கட்சி தலைவர் கிருஷ்ண லாலிற்கு தன் ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், ”என் சுய விருப்பத்தின் பேரில் கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இனி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டுக்கொள்கிறேஎன் என்று எழுதியுள்ளார்.

இது குறித்து ராஷ்டிரிய ஆம் கட்சி தெரிவித்த செய்திக்குறிப்பு ஒன்றில் ”தேர்தலின்போது ராக்கி சாவந்த் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து, தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி பிரசாரம் செய்தார். ஆனால், தேர்தல் முடிவு அவருக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. எனவே, அவர் இனிமேல் தன் அழகை மெருகேற்ற அழகுநிலையம், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல உள்ளார். அவர் இல்லாவிட்டாலும், கட்சி தொடர்ந்து செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Rakhi-in-Politics

Leave a Reply