பிரபல நடிகை ராதிகா பாட்டி ஆனார்
பிரபல நடிகை ராதிகா தற்போது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிசியாக உள்ள நிலையில் அவருடைய மகள் ரேயானுக்கு மகன் பிறந்துள்ளதால் அவர் பாடியாக புரமோஷன் ஆகியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ராதிகாவின் மகள் ரேயானுக்கும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து ரேயான் சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார். .
இந்த நிலையில் தற்போது ரேயானுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து ராதிகா பாட்டியாகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது மகிழ்ச்சியினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று ராதிகா டுவிட்டரில் கூறியுள்ளார். இதனையடுத்து ராதிகாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
So so so happy, god bless🎉🎉🎉🎉💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/Ns8UP36Lja
— Radikaa Sarathkumar (@realradikaa) June 7, 2018