சென்னை தொழிலதிபருடன் நடிகை சமந்தா காதலா? பெரும் பரபரப்பு.

samanthaசென்னையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் ஒருவருடன் சமந்தாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கில் ஆகிய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா சமீபத்தில் விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது விக்ரம் ஜோடியாக ‘10 எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடிக்கிறார்.

சமந்தாவும், நடிகை சித்தார்த்தும் தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்த போது இருவரும் காதல் வசப்பட்டனர். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.  

இந்த நிலையில் நடிகை சமந்தா சென்னை தொழில் அதிபர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளதாகவும், இருவரும் பல இடங்களில் ரகசியமாக சந்தித்து தங்கள் காதலை நெருக்கமாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.  இந்த தகவலை பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று கண்டுபிடித்து செய்தியாக வெளியிட்டுள்ளது. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply