விபச்சார வழக்கில் கைதான தேசிய விருது பெற்ற நடிகையின் அதிர்ச்சி பேட்டி.

swetha basuகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று தெலுங்கு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ஸ்வேதா பாசு, தன்னை போலவே பல பிரபல நடிகைகளும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவருடைய பேட்டி தமிழ் மற்றும் தெலுங்கு படவுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்வேதா பாசு, தான் அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஐதராபாத்தில் உள்ள பெண்கள் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் நடிகை ஸ்வேதா பாசு நேற்று தெலுங்கு பத்திரிகை ஒன்றுக்காக மனம் திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் “தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வந்த நான் தமிழில் ராரா, ரகளை மற்றும் சந்தமாமா ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளேன். ஆனால் நான் நடித்த படங்கள் சரியாக ஓடாததால் எனக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. என்னுடைய அடிப்படை தேவைகளுக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தபோது, என்னை ஒருசிலர் தவறான வழியை பயன்படுத்த அறிவுரை கூறினர். அவர்களை நம்பி ஏமாந்து இந்த தொழிலில் இறங்கினேன். அதன்பின்னர்தான் இந்த தொழிலில் பிரபல நடிகைகளும் ஈடுபட்டு வருவதை தெரிந்துகொண்டு எனக்கு நானே மனதை தேற்றிக்கொண்டேன்.

‘இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் முன்னணி நடிகைகளின் பெயர்களை வெளியிட நான் விரும்பவில்லை என்று கூறிய ஸ்வேதா பாசு, எனக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தால் மீண்டும் இதுபோன்ற ஒரு தவறை நான் செய்ய மாட்டேன்’ என்று அவர் கூறியதாகவும் அந்த தெலுங்கு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply