தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் அறிமுகமான நடிகை டாப்சி, அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’, போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 2’ மற்றும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘வை ராஜா வை’ ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் டாப்சி அளித்த சமீபத்தில் நிருபர்களூக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: தமிழில் நடிக்கும் ‘காஞ்சனா 2’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்தி படமொன்றிலும் நடிக்கிறேன். நடிகைகளுக்கு சரும அழகு ரொம்ப முக்கியம். தோலை மினுமினுப்பாக வைத்துக்கொள்ள ரொம்ப மெனக்கெட வேண்டி உள்ளது. நடிகைகள் அனைவருமே தோலுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
என்னை பொறுத்தவரை மேனியை பளபளப்பாக வைத்துக்கொள்ள அதிகம் தண்ணீர் குடிக்கிறேன். எண்ணெய் உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்கிறேன். சிகப்பு அழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு விளம்பர தூதுவராக ஆகி இருக்கிறேன். நன்றாக யோசித்துதான் இதை ஏற்றுக்கொண்டேன்.
நான் விளம்பரப்படுத்தும் கிரீம் உடம்புக்கு பளபளப்பு கொடுக்கும். எனக்கு சிகப்பு அழகுக்காக கிரீம் பயன்படுத்தும் பழக்கம் இல்லை. நடிகர், நடிகைகள், விளம்பர படங்களில் நடிப்பது அவசியமானது. இதன் மூலம் டெலிவிஷன்களில் அடிக்கடி தோன்ற முடியும்.
இவ்வாறு டாப்சி கூறினார்.