விஐபி 2′ படத்தை ஏன் பார்த்தாய்? டிரைவரை கண்டித்த நடிகை வரலட்சுமி
நடிகையும் நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி, தன்னுடைய கேரவன் டிரைவர் விஐபி2 படத்தை பார்த்ததால் கடிந்து கொண்டுள்ளார். காரணம் அந்த டிரைவர் ‘விஐபி 2’ படத்தை தியேட்டரில் பார்க்காமல், லேப்டாப்பில் ஆன்லைனில் பார்த்தாராம்.
தற்போது ஆன்லைன் பைரசியில் ரிலீஸ் தினத்தன்றே வெளியாகிவிடுவதால் பெரும்பாலானோர் அதில்தான் படம் பார்க்கின்றனர். இந்த நிலையில் தன்னுடைய கேரவன் டிரைவர் ‘விஐபி 2’ படத்தை ஆன்லைனில் பார்த்து கொண்டிருப்பதை பார்த்து நடிகை வரலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை ‘சினிமா தொழிலில் இருந்து கொண்டே சினிமாவை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்று கண்டபடி திட்டியுள்ளார். இந்த தகவலை வரலட்சுமி தன்னுடைய டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார்.