இன்றைய இந்திய சூழ்நிலை மகாத்மா காந்திக்கு அதிர்ச்சி அளித்திருக்கும். ஒபாமா

obamaசமீபத்தில் இந்திய குடியரசு தினவிழாவுக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தற்போது இந்தியாவுக்கு எதிரான ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய வருகையின்போது, இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி புகழாரங்கள் சூட்டிய ஒபாமா, தாய்நாடு திரும்பியதும், நேற்று வாஷிங்டனில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு  உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் அதிபர் ஒபாமா பேசும்போது, ”அழகான, அற்புதமான ஒரு நாடு இந்தியா. இந்தியாவுக்கு கடந்த மாதம் நான் சென்றிருந்தேன். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகள் காரணமாக ஒரு மத நம்பிக்கைகளை கொண்ட மக்கள் மற்ற மத நம்பிக்கைகளை பின்பற்றும் மக்களை குறி வைத்து விமர்சிக்கப்படுகிறது.

அங்கு, சமய சகிப்புத்தன்மை குறைந்திருக்கிறது. சமாதானத்தை விரும்பிய மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவரை இந்த சூழ்நிலை அதிர்ச்சியடைய செய்திருக்கும். நம்பிக்கையே நம்மை சரியாக செயல்பட வைக்கிறது என்பது உண்மையே. ஆனால், அதே நம்பிக்கை சில நேரங்களில் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்கது. பாகிஸ்தான் பள்ளிகளில் இருந்து பாரீஸ் வீதிகள் வரை இதுபோன்ற நம்பிக்கையில் தீவிரமாக இருப்பவர்களே வன்முறையையும், தீவிரவாதத்தையும் தோற்றுவிக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்தியாவில் மத சுதந்திரம் குறைந்திருப்பதாக ஒபாமா சுட்டிக்காட்டி பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply