அதானி குழுமம் பங்கு கடும் வீழ்ச்சி: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

அதானி குழுமம் பங்கு கடும் வீழ்ச்சி: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில மாதங்களாக உச்சத்துக்கு சென்றது என்றும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் ஏராளமான லாபத்தை பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதானி குடும்பத்தின் பங்குகள் இன்று படுவீழ்ச்சி அடைந்துள்ளன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகளான அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை 19.1% சரிந்து உள்ளது.

அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்களின் பங்குகளும் 15% சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.