உ.பி.முதல்வரின் முதல் அதிரடி உத்தரவு. அமைச்சர்கள் அதிர்ச்சி
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களில் தனிப்பெருன்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 403 இடங்களில் 312 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில் உபி மாநிலத்தின் முதல்வராக நேற்று யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். மேலும் துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர்களும் பதவியேற்றனர்.
இந்நிலையில் முதல்வர் பதவியேற்ற யோகி ஆதித்யநாத், முதல் உத்தரவாக அனைத்து அமைச்சர்களும் அவர்களுடைய வருமானம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் முழு விவரத்தை உடனடியாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால் அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும் பொதுமக்கள் நம்பிக்கையுடன் அரசை நோக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரத பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றபோதும் தன்னுடைய அமைச்சர்களுக்கு இதேபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.