காவிரிய வச்சுக்கோ… அம்மாவை குடு… என்ற வாசகத்துடன் கூடிய பேனர் ஒன்றை பெரம்பலூர் அ.தி.மு.க.வினர் வைத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் கடந்த 27 ஆம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. தொண்டர்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்ற போராட்டங்கள் ஆகியவற்றை நடத்தி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜெயலலிதா ஜெயிலில் இருப்பதன் அதிர்ச்சி காரணமாக பள்ளி மாணவிகள் உள்பட 40க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரையும் மாய்த்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெரம்பலூரில் ”காவிரிய வச்சுக்கோ… அம்மாவை குடு…, அம்மா… வா… தேம்பும் தமிழகம்” என்று ஒரு குழந்தை அழுவதை போன்ற படத்துடன் கூடிய பேனரை அ.தி.மு.க.வினர் வைத்துள்ளதுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.