திருநின்றவூரில் அதிமுக கவுன்சிலர் கணவர் வெட்டி கொலை. பெரும் பரபரப்பு.

murderதிருநின்றவூரில் நேற்றிரவு கவுன்சிலர் கணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் பார் ஏல எடுத்த வகையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தால் திருநின்றவூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

திருநின்றவூர் மேட்டுத்தெருவை சேர்ந்த அதிமுக கவுன்சிலர் மரகதவல்லி. இவருடைய கணவர் பூச்சந்திரன் பார் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். பார் ஏலம் எடுத்த வகையில் ஏற்பட்ட முன்விரோதம்  காரணமாக பூச்சந்திரனை கொலை செய்ய மர்ம நபர்கள் திட்டமிட்டிருந்தனர்.

நேற்று இரவு பார் வியாபாரத்தை முடித்துவிட்டு பூச்சந்திரன் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கையில் மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். இதனால் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பூச்சந்திரனை அவரது உறவினர்கள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைக்கு பலனின்றி பரிதாபமாக பலியானார்.

முன்விரோதம் காரணமாக நடந்த இந்த கொலை குறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை செய்து வருகினறனர்.

Leave a Reply