முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி நீக்கம்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி

நாடாளுமன்றத்தில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அந்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என முன்னால் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி நேற்று காலை கூறிய நிலையில் மாலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பாஜக மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே அவர் நீக்கபப்ட்டதாக கூறப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லைவெனில் அதிமுக கண்டிப்பாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கும் என்று அதிமுகவின் முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி கூறியதை அதிமுக மேலிடம் ரசிக்கவில்லை. இவருடைய கருத்து பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் அதிமுக மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அதன் காரணமாக கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகாவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நீக்கத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது உண்மையாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அவர் தமிழகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் சர்ச்சையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மோடி அரசியல் செய்தார், அதுபோல் ஆந்திராவில் நடக்காது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply