அதிமுக படுத்துவிட்டது. ஸ்டாலின் கூறியது எந்த அர்த்தத்தில்?
திமுக பொருளாளரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘அதிமுக படுத்துவிட்டது’ என்று கூறியது அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் படுத்த படுக்கையாய் இருக்கும் நிலையில் மு.க.ஸ்டாலின் அதிமுக படுத்துவிட்டது என்று கூறியது அரசியல் அநாகரீகமான பேச்சு என்று மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக அபிமானிகள் டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தான் வேறு அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும் தி.மு.கதான் ஆட்சியிலிருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என்றும், ஐந்து மாதங்களாக மக்கள் பிரச்சனைகளுக்காக திமுகதான் மக்கள் பிரச்சனைகளுக்காக செயலாற்றி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தபோதிலும் அவருக்கு கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றது.