அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரது வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது
அதிமுக முக்கிய நிர்வாகி குபேந்திரன். இவர் சேலம் மாவட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க தலைவராக இருந்து வருகிறார் என்பதும் சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
குபேந்திரன் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே கூட்டுறவு வங்கி சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர்கள் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது