மே 22ல் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம். ஜெயலலிதா அதிகாரபூர்வ அறிவிப்பு

jayaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியை எந்த நேரத்திலும் ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் கர்நாடக அரசுக்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா இந்த வழக்கை மேல்முறையீடு செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமியும் மேல்முறையீடு செய்வேன் என்று கூறியுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வரும் 22ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்று காலை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “வருகின்ற 22 ஆம் தேதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், காலை 7 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், வருகின்ற 23 ஆம் தேதி அவர் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply