அதிமுகவில் அதிரடி களையெடுப்பு. அமைச்சர் உள்பட முக்கிய தலைவர்கள் நீக்கம்

அதிமுகவில் அதிரடி களையெடுப்பு. அமைச்சர் உள்பட முக்கிய தலைவர்கள் நீக்கம்

chinnaiahதமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு அமைச்சர் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்த டி.கே.எம்.சின்னையா, அந்தப் பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இவருக்குப் பதிலாக சிட்லபாக்கம் ச.ரஜேந்திரன் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சின்னையா வகித்த வந்த கால்நடைத்துறை அமைச்சர் வளர்மதிக்கு கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று இதற்கான உத்தரவை ஆளுநர் ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

மேலும்  புதுக்கோட்டை மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்குப் பதிலாக கழக விவசாயப்பிரிவு செயலாளர் பி.கே.வைரமுத்து அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் தாம்பரம் நகர கழக செயலாளர் பொறுப்பிலிருந்து ம.கரிகாலன் நீக்கப்பட்டார். இந்தப் பொறுப்பை கூடுதலாக சிட்லபாக்கம் ராஜேந்திரன் கவனிப்பார் என கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து தண்டரை கே.மணோகரன் நீக்கப்பட்டார். அவர் வகித்துவந்த பொறுப்பில் எம்.கூந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply