அதிமுக லோக்சபா குழு தலைவர் மைத்ரேயன் திடீர் நீக்கம். ஜெயலலிதா அதிரடி

02-maithreyan-mp-admk-300அ.தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் முக்கிய தலைவர் மைத்ரேயன் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக நவநீதகிருஷ்ணன் மாநிலங்களவை தலைவராக செயல்படுவார் என அதிமுக பொதுச்செயலாளர் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அதிமுக எம்.பி மைத்ரேயன் கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

இதுநாள் வரை அ.தி.மு.க மக்களவை குழுத் தலைவராக இருந்த கரூர் எம்.பி. தம்பிதுரை, நாடாளுமன்றத்தின் லோக்சபா துணை சபாநாயராக சமீபத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  இதனையடுத்து அ.தி.மு.க லோக்சபா குழுத் தலைவராக வேணுகோபாலை  பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று நியமனம் செய்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா குழுத் தலைவராக இருந்த மைத்ரேயனை அப்பொறுப்பிலிருந்து நீக்கியதோடு, அ.தி.மு.க மருத்துவ அணித் தலைவர் பொறுப்பில் இருந்தும் திடீரென ஜெயலலிதா நீக்கியுள்ளார். மைத்ரேயனுக்கு மாற்றாக அ.தி.மு.க லோக்சபா குழுத் தலைவராக நவநீதகிருஷ்ணன் செயல்படுவார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். லோக்சபா துணைத் தலைவராக பி.குமாரும், செயலாளராக காமராஜிம், கொறடாவாக கே.என்.ராமச்சந்திரனும், பொருளாளராக வனரோஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜ்யசபா துணைத்தலைவராக முத்துக்கருப்பனும், செயலாளராக ரத்தினவேலுவும், கொறடாவாக சசிகலா புஷ்பமும், பொருளாளராக லட்சுமணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மைத்ரேயனின் திடீர் நீக்கத்திற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை.

Leave a Reply