கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 37 எம்.பிக்கள் மற்றும் ராஜ்ய சபா எம்.பிக்கள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நேற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி தம்பித்துரை அ.தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவராகவும் , துணை தலைவராக வி.மைத்ரேயனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் பொறுப்பாளர்களையும் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி
அதிமுக நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள்:
தலைவர்: எம்.தம்பிதுரை
துணைத் தலைவர்: வி.மைத்ரேயன்
அதிமுக நாடாளுமன்ற மக்களவை குழு நிர்வாகிகள்:
தலைவர்: எம். தம்பிதுரை
துணைத் தலைவர்: பி.வேணுகோபால்
கொறடா: பி.குமார்
பொருளாளர்: கே.என். ராமச்சந்திரன்
செயலாளர்: ஆர்.வனரோஜா
அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழு நிர்வாகிகள்:
தலைவர்: வி.மைத்ரேயன்
துணைத் தலைவர்: எஸ். முத்துக்கருப்பன்
கொறடா: எல். சசிகலா புஷ்பா
பொருளாளர்: ஆர். லட்சுமணன்
செயலாளர்: டி.ரத்தினவேல்