சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வெளியே மூன்று அடுக்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனையில், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள ஜெயலலிதாவிற்கு வெளியில் இருந்து உணவு வழங்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிறைச்சாலைக்கு வெளியே நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்களையும் கோஷங்களையும் அவர் எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சிறைக்கு வெளியே கூடியிர்ந்த அதிமுகவினர்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார் கேட்டுக்கொண்டும், அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினருக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.