ஆங்கிலம் தெரியாத அதிமுகவினர்: குருமூர்த்தி விமர்சனம் குறித்து அன்புமணி

ஆங்கிலம் தெரியாத அதிமுகவினர்: குருமூர்த்தி விமர்சனம் குறித்து அன்புமணி

நேற்று துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக முதல்வரையும் துணை முதல்வரையும் ஆண்மையில்லாதவர் என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் Impotent என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுக அமைச்சர் ஜெயகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆங்கிலத்தில் Impotent என்ற வார்த்தைக்கு ஆற்றல் இல்லாதவர் என்பதுதான் பொருள் என்றும் ஆங்கிலம் தெரியாததால் அதிமுகவினர் கோபப்படுவதாக ஆடிட்டர் குருமூர்த்தி பதிலளித்திருந்தார்

இந்த நிலையில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்து சரியானதே, ஆங்கிலம் தெரியாததால் குருமூர்த்தியின் கருத்தை தவறாக அதிமுகவினர் புரிந்துள்ளனர் என அன்புமணி விமர்சித்துள்ளார்.

Leave a Reply