வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கும் பேச்சாளர்கள் பட்டியலை நேற்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் கட்சியின் பேச்சாளர்கள் ஆகியோர் பெயர்கள் உள்ளது.
நடிகர்களின் வரிசையில் முன்னாள் எம்.பி ராமராஜன், காமெடி நடிகர் செந்தில், குண்டு கல்யாணம், வில்லன் நடிகர் பொன்னம்பலம், ஆனந்த்ராஜ் மற்றும் நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா, குயிலி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
ஜெயலலிதாவுடன் 1965ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான வெண்ணிற ஆடை நிர்மலாவும் பேச்சாளராக அறிவிக்கபப்ட்டுள்ளார். மேலும் காமெடி நடிகர் சிங்கமுத்துவின் பெயரும் முக்கிய பேச்சாளர்களின் பெயரில் இருக்கிறது.
சமீபத்தில் மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவுக்கு வந்த நாஞ்சில் சம்பத், மற்றும் திமுகவில் இருந்து அந்த பரிதி இளம்வழுதி ஆகியோர்களும் அதிமுகவின் வெற்றிக்காக 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஏற்கனவே ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர், நடிககளும் பிரச்சார களத்தில் இறங்க உள்ளனர்.