தினகரன் வெற்றி எதிரொலி: அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிரபலங்கள்

தினகரன் வெற்றி எதிரொலி: அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பிரபலங்கள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தலைவர்கள் நேற்று முதல்வர் பழனிச்சாமி தலைமையில் கூடி தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தனர். தினகரன் வெற்றியால் அதிமுகவினர் அணி மாற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் அதனை தடுக்க ஆலோசனையும் நடைபெற்றதாக தெரிகிறது

இந்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், நெல்லை மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, செய்தித்தொடர்பாளர் குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத், மகளிர் அணி துணை செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, மற்றும் வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இருப்பினும் அதிமுகவின் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் பலர் தினகரன் ஆதரவு நிலையில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் இதனால் ஆட்சி கவிழும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

Leave a Reply