அதிமுக விஐபிக்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள்: முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்

அதிமுக விஐபிக்கள் விரைவில் பாஜகவில் இணைவார்கள்: முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன்

அதிமுகவை தற்போது பாஜக தான் ஆட்டுவித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில் விரைவில் அதிமுகவில் உள்ள முன்னணி தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் நேற்று நெல்லையில் பாஜக அலுவலகத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவருக்குமே கொள்கைகள் கிடையாது. பாரதீய ஜனதாவில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற வலுவான தலைவர்கள் உள்ளனர். தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சியில் தலைவர்கள் உள்ளனர் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன், ஏராளமான அதிமுக விஐபிக்கள் விரைவில் பாரதிய ஜனதாவில் இணைவார்கள்’ என்று கூறினார்.

Leave a Reply