அதிமுக நினைத்தால் பாஜகவை மிரட்டலாம்! எப்படி தெரியுமா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசை பாஜகவே ஆட்சி செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
ஜெயலலிதா போன்ற வலிமையான தலைமை இருந்தபோது பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாதபோது, தற்போது அதிமுகவின் இரு அணிகளையும் பொம்மலாட்ட பொம்மைகள் போல் ஆட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. குடியரசு தலைவர் வேட்பாளருக்கு இரு அணி தலைவர்களும் வலிய டெல்லி போய் ஆதரவு தருகின்றனர்.
ஆனால் அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைந்து பாஜக வேட்பாளரை எதிர்த்தால் ராம்நாத் கோவிந்த்தின் வெற்றி அவ்வளவு சுலபமல்ல. பாஜக கூட்டணியில் தற்போது 49 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளன. அதில் பிஜூ ஜனதாதளம் 2.99, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 2, ஐக்கிய ஜனதாதளம் 1.91, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 1.53, இந்திய தேசிய லோக்தளம் 0.38 சதவீத வாக்குகளை வைத்துள்ளன. சிவசேனாவின் 2.34 வாக்கும் இதில் அடக்கம். அதிமுக இந்த நேரத்தில் நினைத்தால் தனது5.39 சதவீத வாக்குகளை வைத்து கொண்டு பாஜகவை மிரட்டலாம். ஆனால் அது நடக்குமா? என்பது சந்தேகம்தான்.