தமிழகத்தில் அதிமுக எழுச்சி அலை. திமுக, தேமுதிக, மதிமுக,பாமக, காங்கிரஸ் படுதோல்வி.
நாடு முழுவதும் மோடி அலை. ஆனால் தமிழகத்தில் மட்டும் அதிமுக அலை. அனைத்து கருத்துக்கணிப்புகளும் அதிமுக 25 தொகுதிகள் முதல் 30 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று கணித்திருந்தன. ஆனால் அனைத்து கருத்துக்கணிப்புகளையும் மீறி அதிமுக அபாரமாக 37 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
பத்து தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அதுபோல தேமுதிக,பாமக,காங்கிரஸ் மற்றும் மதிமுக கட்சிகள் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளன.
தமிழகத்தின் முக்கிய வேட்பாளர்களான வைகோ, ஜெகத்ரட்சகன், ராசா, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆகிய அனைவரும் பின்னடைவில் உள்ளனர்.