உலகப்புகழ் பெற்ற எகிப்து பிரமிடுகள் முன் ஆபாச படம் எடுத்த பிரபல நடிகை மீது விசாரணை நடத்த எகிப்து அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எகிப்தில் பல பிரமிடுகள் இருந்தாலும், அவற்றில் மிகவும் புனிதமாக கருதப்படும் பிரமிடுகளில் ஒன்று கிஷா பிரமிடு. 4500 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 23 லட்சம் கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த பிரமிடுகளை எப்படி கட்டினார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 முதல் 9 டன் எடையுள்ள ஒவ்வொரு கல்லையும், விஞ்ஞான வசதியில்லாத அந்த காலத்தில் எப்படி தூக்கி கொண்டு வந்தார்கள் என்பதே புரியாத புதிராக உள்ளது.
இத்தகையை சிறப்பம்சம் வாய்ந்த இந்த பிரமிடு முன் ஆபாச நடிகை கார்மன் டி லுஸ் என்பவர் அரைநிர்வாணமாகவும், நிர்வாணமாகவும் தோன்றிய வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் புகைப்படம் ஒன்றில் நடிகை கார்மன் அரைகுறை ஆடையுடன் குதிரை மீது உட்கார்ந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்த்து எகிப்து அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. உடனடியாக நடிகை மீதும் அவரது குழுவினர் மீதும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து நடிகை கார்மன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ஆடை இல்லாமல் இருந்த போது அங்கு செல்ல வில்லை. நான் மக்களின் புனித தலமாகக் கருதப்படும் இடத்தில் ஆபாச படம் எடுக்கவில்லை. நான் மட்டுமே அங்கு பயணம் செய்தேன் ஏனெனில் நான் எகிப்தை நேசிக்கிறேன்” என கூறி உள்ளார். (“I apologize to the people of Egypt for any concerns and confusion my picture caused. I did not film, or participant in the filming, of any pornographic content during my visit to Egypt)